விக்ரம் படத்தில் பிந்துமாதவி!

Bookmark and Share

விக்ரம் படத்தில் பிந்துமாதவி!

வை ராஜா வை படத்திற்கு பிறகு தெகிடி அசோக் செல்வனுடன் இணைந்து கூட்டத்தில் ஒருவன் படத்தில் நடித்து வருகிறார் ப்ரியாஆனந்த். இதையடுத்து ஏற்கனவே அரிமா நம்பி படத்தில் நடித்தவர் அதே ஆனந்த் சங்கர் விக்ரமைக் கொண்டு இயக்கும் மர்ம மனிதன் படத்திலும் நடிப்பதாக இருந்தது.

அதுபற்றி ப்ரியா ஆனந்தே உறுதிபடுத்தியும் வந்தார். ஆனால், இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நேரத்தில், தன்னிடம் கால்சீட் இல்லை என்றொரு காரணத்தை சொல்லி வெளியேறிவிட்டாராம் ப்ரியாஆனந்த்.

ஆனால் இதுபற்றி விசாரித்தபோது, விக்ரமின் மர்ம மனிதன் படத்தின் முக்கிய நாயகியாக நடிக்கயிருப்பவர் காஜல்அகர்வால் தானாம். அவர்தான் விக்ரமுக்கு ஜோடியாம்.

ப்ரியா ஆனந்துக்கு ஒரு சிறிய கேரக்டர்தான் தரப்பட்டதாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த மாதிரி கேரக்டரில் நடித்தால் தனது ஹீரோயின் இமேஜ் போய்விடும் என்றுதான் வேறு காரணத்தை சொல்லி அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

விளைவு, அதற்காகவே காத்திருந்தவர் போல் இப்போது பிந்துமாதவி ப்ரியாஆனந்த் மறுத்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions