க்ரைம் கதையில் பிந்து மாதவி!

Bookmark and Share

க்ரைம் கதையில் பிந்து மாதவி!

பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு பிந்து மாதவியின் மார்க்கெட் சற்று டல்லாகத்தான் இருக்கிறது. அதையடுத்து தேசிங்கு ராஜா, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், வருத்தப்படாத வாலிபர் சங்கர், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தபோதும் சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும்,  இரண்டு ஹீரோயின் ரோல்களிலும் நடித்திருந்தார்.

இருப்பினும், தற்போது நடித்து வரும் கலக்குறே மாப்ளே, சவாலே சமாளி, ஹைகூ ஆகிய படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தலக்கோணம் என்ற படத்தை தயாரித்த எஸ்.ஜே.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இதுவரை கலகலப்பான, கிளுகிளுப்பான வேடங்களிலேயே நடித்திருக்கும் பிந்து மாதவி முதன்முதலாக இந்த படத்தில் க்ரைம் கதையில் நடிக்கிறார். மர்மமான முறையில் நடந்த ஒரு கொலையை கண்டு பிடிக்கும் வேடத்தில் நடிக்கும் பிந்துமாதவி, ஆக்சன் கோதாவிலும் குதிக்கிறாராம்.

அதனால் இந்த படத்துக்காக சண்டை பயிற்சி எடுக்கும் அவர், அதையடுத்து இதுபோன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிக கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions