தமனின் ரசிகையாம் பிந்துமாதவி!

Bookmark and Share

தமனின் ரசிகையாம் பிந்துமாதவி!

நடிகை பிந்து மாதவி இசையில் அதிகப்படியான ஈடுபாடு கொண்டவராம். அதனால் படப்பிடிப்பு தளங்களுககு வந்து விட்டால், நடிக்கிறதுபோக மீதமுள்ள நேரங்களில் ஏதாவது பாடல்களை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்.

அது இந்த மொழிதான் என்பது இல்லாமல், அந்த இசை பிடித்து விட்டால் அதை ரசிக்கிறார் பிந்து. அதிலும், சமீபகாலமாக தமன் இசையமைத்துள்ள பாடல்களை அவர் அதிகமாக கேட்கிறாராம்.

தனது தாய்மொழியான தெலுங்கு படங்களுக்கு அவர் அதிகமாக இசையமைப்பதோடு ஹிட் பாடல்களை கொடுத்து வருவதால், அவரது பாடல்களை அதிகமாக ரசித்து வரும் பிந்துமாதவி, இந்த விசயத்தை ஒரு சினிமா விழாவில் தமனிடமும் சொல்லி நானும் உங்கள் ரசிகைதான் என்று தமனிடன் சொல்லியுள்ளார்.

அதோடு, விடாமல், அவ்வப்போது வெளியாகும் அவரது படங்களின் ஆடியோவை கேட்டு ரசிக்கும் பிந்துமாதவி, உடனே அவருக்கு போன் செய்தும் அதில் தனக்கு பிடித்தமானதை பகிர்ந்து கொள்கிறாராம்.

அந்த வகையில், தற்போது தான் நடித்துள்ள தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்திற்கு அவர் இசையமைத்திருப்பது தனக்கு அதிக சந்தோசத்தைக் கொடுத்திருப்பதாக சொல்லும பிந்துமாதவி, அந்த படத்தின் பாடல்களை ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது கேட்காமல் தூங்கச்செல்வதே இல்லையாம். அந்த அளவுக்கு தனது இசையால் பிந்துமாதவியை மயக்கிப்போட்டுள்ளாராம் தமன்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions