சிபிராஜ் ஜோடியாக பிந்து மாதவி

Bookmark and Share

சிபிராஜ் ஜோடியாக பிந்து மாதவி

ஸ்டூடண்ட் நம்பர்-1 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிபிராஜ். ஜோர், கோவை பிரதர்ஸ், லீ, நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் சிபி, ஆனால் எந்தப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை.

இந்தசூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியான நாய்கள் ஜாக்கிரதை படம் அவருக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள சினிமாவில் போராட தயாராகிவிட்டார் சிபி. தற்போது, ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ். இப்படத்தை தரணிதரன் இயக்குகிறார்.

சரித்திரம் கலந்த, திகில் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சிபிராஜ். சிபிராஜ் உடன் கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கூடவே இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸச்சேரியும் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தில் ஹீரோயின் யார் என்று முடிவாகமல் இருந்த சூழலில், இப்போது பிந்து மாதவி நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சவாலே சமாளி, கலக்குற மாப்ளே படங்களில் நடித்து முடித்துள்ள பிந்து மாதவி, அடுத்தப்படியாக ஜாக்சன் துரையில் நடிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions