2 பெண்களை மணந்து விவாகரத்து செய்த கரன்சிங் குரோவருடன் பிபாசா பாசு திருமணம்

Bookmark and Share

2 பெண்களை மணந்து விவாகரத்து செய்த கரன்சிங் குரோவருடன் பிபாசா பாசு திருமணம்

பிரபல நடிகை பிபாசா பாசு. இந்தியில் கொடூரம் மற்றும் பயங்கர மூட்டும் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆங்கில நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வங்காளியை தாய் மொழியாக கொண்ட பிபாசா பாசு 17 வயதில் மாடலிங் தொழிலில் ஈடுபட்டார். சிறந்த மாடலிங் விருது பெற்ற அவரை நடிகர் வினோத் கன்னா 2001–ல் தனது மகன் அக்ஷய்கன்னா நடித்த ‘ஹிமாலய புத்ர’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்த முயன்றார்.

அதற்கு பிபாசா பாசு மறுத்துவிட்டதால் அஞ்சலா கவேரி என்ற நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேரும் வாய்ப்பையும் சுனில் ஷெட்டியுடன் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.

அதன் பிறகு அக்ஷய் குமாருடன் அக்னாமி படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. 2002–ல் ராஸ் என்ற திரில்லர் படத்தின் மூலம் புகழ் பெற்றார். இந்தப் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த தினோ மொரியாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகினர். அது 2002–ல் முறிந்தது.

பின்னர் ஜிசும் படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜான் ஆபிரகாமுடன் காதல் வயப்பட்டார். 2011–ல் இந்த காதலும் முறிந்தது.

தொடர்ந்து நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்ததைத் தொடர்ந்து தற்போது நடிகர் கரன்சிங் குரோவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த தகவலை இருவரும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

நாளை டெல்லியில் வங்காள முறைப்படி திருமணம் நடைபெறும் என்று முறைப்படி அறிவித்தனர். திருமணச் சடங்குகள் டெல்லியில் உள்ள வீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பிபாசாபாசு, கரன்சிங் குரோவர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கரன்சிங் குரோவர் டெல்லியில் வசிக்கும் பஞ்சாபி சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் மாடலிங் தொழிலுடன் சினிமாவில் நடித்து வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். இவர் ஏற்கனவே நடிகை ஷ்ரத்தா நிகாம் என்பவரை கடந்த 2008–ல் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தார். 10 மாதங்களில் விவகாரத்து பெற்று பிரிந்தார்.

பின்னர் 2012–ல் ஜெனிபர் வீன்கெட் என்பவரை மணந்து 2 ஆண்டுகளில் பிரிந்து விட்டார். அதன் பிறகு பிபாசாபாசுவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

பிபாசா பாசுவுக்கு தற்போது 37 வயதும் கரன்சிங்குக்கு 34 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions