ப்ளாக் பாண்டிக்கு சான்ஸ் கொடுக்கும் சூரி!

Bookmark and Share

ப்ளாக் பாண்டிக்கு சான்ஸ் கொடுக்கும் சூரி!

வடிவேலு, விவேக், சந்தானம் என எல்லா காமெடியன்களுமே காமெடி காட்சிகளில் தங்களுடன் நடிப்பதற்கு ஒரு டீமை வைத்திருக்கிறார்கள். ஆனால் சூரி அப்படியல்ல. படத்துக்குப்படம் ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்வதால் தனது காமெடி குழு என்று எந்த நடிகர் நடிகைகளையும் அவர் வைத்துக்கொண்டதில்லை.

ஆனால், சமீபகாலமாக, அவருக்கென்று ஒரு கமர்சியல் வேல்யூ ஏற்பட்டிருப்பதால், தான் நடிக்கும் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் ஹீரோக்களுடன் தான் இடம்பெறாத மற்ற காட்சிகளில் தன்னுடன் நடிப்பவர்கள் ஓரளவு காமெடி பண்ணக்கூடியவர்களாக இருந்தால் காமெடி ஒர்க்அவுட் ஆகும் என்று, வளர்ந்து வரும் சில இளவட்ட காமெடியன்களுடன் கூட்டணி அமைக்கத் தொடங்கியிருக்கிறார் சூரி.

அந்த வகையில், தற்போது ஜெயம்ரவியுடன் இணைந்து அவர் நடித்து வரும் அப்பாடக்கர் படத்தில், வழக்கம்போல் நாயகன் ஜெயம்ரவியின் நண்பனாக நடிக்காமல், எதிரும் புதிருமான வேடத்தில் நடிக்கிறார் சூரி.

குறிப்பாக, அஞ்சலியின் முறைமாமனான சூரி, அஞ்சலியை காதலிக்கும் ஜெயம்ரவியை எதிரியாக பார்ப்பதோடு, அவரிடமிருந்து முறைப்பெண்ணை கைப்பற்றி விட வேண்டும் என்று போட்டிக்கோதாவில் குதிப்பாராம்.

அப்போது, தனக்கு உறுதுணையாக இருக்க ஒரு காமெடியன் தேடியபோது ப்ளாக் பாண்டி சரியாக இருப்பார் என்று அவரை புக் பண்ண சொன்னாராம் சூரி. அந்த வகையில், சூரி-ப்ளாக் பாண்டி இருவரும் காமெடியில் செம கலக்கு கலக்கியிருக்கிறார்களாம்.

அதனால், இனி சூரியுடனான காமெடி கூட்டணி தொடர வேண்டும் என்று ஆசைப்படும் ப்ளாக் பாண்டி, சூரி அண்ணன் எனக்கு இதற்கு முன்பும் சில படங்களில் சிபாரிசு செய்திருக்கிறார்.

ஆனால், இந்த படத்தில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு இனி தொடர்ந்து வாய்ப்பு தருவதாகவும் சொல்லியிருக்கிறார். அதனால் சூரி அணணன் புண்ணியத்தில் கூடிய சீக்கிரமே நானும் பெரிய காமெடியனாகி விடுவேன் என்கிறார் ப்ளாக் பாண்டி. 


Post your comment





Related News
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions