சரிபாதி காமெடி கேட்கும் பாபி சிம்ஹா!

Bookmark and Share

சரிபாதி காமெடி கேட்கும் பாபி சிம்ஹா!

நேரம், ஜிகர்தண்டா படங்களில் அதிரடி வில்லனாக நடித்து தற்போது ஹீரோவாக ப்ரமோஷன் பெற்றிருப்பவர் பாபி சிம்ஹா. அதோடு, அவர் ஹீரோவாக கமிட்டாகி நடித்த ஒரு படம்கூட இன்னும் திரைக்கு வராதபோதும் அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி அவரை புக் பண்ண வருபவர்கள், சினிமாவில் வில்லனாக இருந்து ஹீரோவான ரஜினி, சத்யராஜ் போன்ற ஹீரோக்களை அவர் முன் வைத்துதான் கதையே சொல்கிறார்களாம்.

அதோடு, மேற்படி ஹீரோக்களின் ஹிட் படங்களை சொல்லி இந்த படத்தில் நீங்கள் நடித்தால் அந்த ஹீரோக்களுக்கு ஏற்பட்ட இமேஜ் உங்களுக்கும் கிடைக்கும் என்கிறார்களாம்.

இதனால் கதைகளை கேட்கும்போது கற்பனையில் சம்பந்தப்பட்ட ஹீரோக்களை கொண்டு வந்துதான் கேட்கிறாராம் பாபி சிம்ஹா. முக்கியமாக, ரஜினி தனக்கு பிடித்தமான நடிகர் என்பதால் அவரது பாணியில் நடித்தால் ஒரு பெரிய இடத்தை பிடிக்கலாம் என்று நினைக்கும் அவர், ஆக்சன் கதைகள் என்றாலும் அதில் காமெடியை சரிபாதியாக கலக்க சொல்கிறாராம்.

அதனால், வித்தியாசமான கதைக்களங்களுடன் பாபி சிம்ஹாவை தேடிச்சென்றவர்கள், இப்போது காமெடியை கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

 


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions