தேசிய விருது பயத்தை தருகிறது - பாபி சிம்ஹா!

Bookmark and Share

தேசிய விருது பயத்தை தருகிறது - பாபி சிம்ஹா!

பீட்சா, நேரம், சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்தின் மூலம் பேசப்படும் நடிகரானார். அதுமட்டுமின்றி இப்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்துள்ளது.

ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு ஹீரோவாக உயர்ந்திருக்கும் பாபி இப்போது, பாம்புசட்டை, உறுமீன், மசாலா படம், இறவி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் உறுமீன் படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்க வந்த பாபி சிம்ஹாவை நாம் சந்தித்த போது அவர் அளித்த பேட்டி இதோ.... ஜிகர்தண்டா படம் அனைவராலும் பாராட்டப்பட்டு இப்போது எனக்கும் தேசிய விருது பெறும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படத்தின் எடிட்டருக்கும் விருது கிடைத்தது மகிழ்ச்சி. இதற்கு முன்னர் வரை வந்தமோ படங்களில் நடித்தமோ என்று சென்று வந்தேன். ஆனால் இப்போது விருதுக்கு பின்னர் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் முன் நிறைய யோசிக்க வைக்கிறது.

சொல்லப்போனால் ஒரு வித பயத்தை உண்டாக்கியுள்ளது. இனி ரசிகர்கள் விரும்புகிற மாதிரி, அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன். என்னை பொறுத்தவரை கதை தான், நான் எந்த மாதிரி ரோலில் நடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது.

நல்ல கதை அமைந்தால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லன் எந்த ரோலிலும் நடிப்பேன். தற்போது உறுமீன் படத்தில் நடித்து வருகிறேன். இது ஒரு த்ரில்லர், ஆக்ஷன் மற்றும் குட்டி பேன்டசி படம். ஒரு மிடில் கிளாஸ் பையன் வேலை தேடி சென்னைக்கு வருகிறான்.

அங்கு அவன் சந்திக்கும் பிரச்னைகள் தான் படத்தின் ஒன்-லைன் ஸ்டோரி. இந்தப்படத்தில் விஷூவல், சவுண்ட் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் வேறுமாதிரி வந்துள்ளது.

ஜூனில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணியுள்ளோம். உறுமீன் படத்தை தொடர்ந்து பாம்புசட்டை, மசாலா படம், இறைவி, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

 

 


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions