பாபி சிம்ஹாவை ரஜினி ரேஞ்சுக்கு பேசுவது சரியல்ல- சிவா பேச்சு

Bookmark and Share

பாபி சிம்ஹாவை ரஜினி ரேஞ்சுக்கு பேசுவது சரியல்ல- சிவா பேச்சு

ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹாவை சிலர் சின்ன வயது ரஜினி மாதிரியே இருப்பதாக கருத்து சொல்லி வருகிறார்கள். அதனால் அடுத்த ரஜினியாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிம்ஹா. 

இதற்கெல்லாம் மேலாக அவர் தேசிய விருது பெற்ற பிறகு ஒருமுறை ரஜினியே பாபி சிம்ஹாவுக்கு போன் செய்து அழைத்து வாழ்த்தியது அவருக்கு இன்னும் அதிக நம்பிக்கையை கொடுத்தது. அதனால் அதிக உற்சாகத்தோடு அதிகமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் பாபி சிம்ஹா.

மேலும், தற்போது அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடித்துள்ள மசாலா படம் என்ற படத்தின் ஆடியோ விழாவில் பேசியவர்கள் அடுத்த ரஜினி ரேஞ்சுக்கு பாபி சிம்ஹாவை புகழ்ந்து தள்ளினர். 

ஆனால், அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில், “எல்லாரும் பாபி சிம்ஹாவை அடுத்த ரஜினி என்கிற அளவுக்கு பேசினார்கள். சந்தோசமாயிருக்கு. ஆனால் ரஜினியாவது அத்தனை எளிதான விசயமல்ல என்றார்.

காரணம், ரஜினியால் வாழ்ந்த டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நிறையபேர். ஒருவேளை தனது படம் தோல்வியடைந்து படத்தை வாங்கினவர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து விட்டால், அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கிற அளவுக்கு பெரிய மனசு கொண்டவர் ரஜினி.

அதனால் தன்னால் யாராவது நஷ்டப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கிற அளவுக்கு பாபி சிம்ஹாவும் மாறணும்” அதற்குள் அவரை அடுத்த ரஜினி ரேஞ்சுக்கு பேசுவது சரியல்ல என்றார்.


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions