ஹீரோவுக்கான திறமையை வளர்த்துக் கொள்ளாத பாபி சிம்ஹா

Bookmark and Share

ஹீரோவுக்கான திறமையை வளர்த்துக் கொள்ளாத பாபி சிம்ஹா

ரஜினி, சத்யராஜ் என எத்தனையோ நடிகர்கள்  வில்லன் வேடங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார்கள். வில்லன்கள் ஹீரோவாக நடிப்பது திரையுலகில் புதிய விஷயமுமில்லை.

அதே சமயம் வில்லனிலிருந்து ஹீரோவான அத்தனை பேரும் ஹீரோவாக வெற்றியடைந்ததாகவும் சொல்ல முடியாது. நடனம், சண்டை என ஹீரோவுக்குத் தேவையான திறமை தகுதி உள்ளவர்களால் மட்டுமே கதாநாயகனாக தாக்குப் பிடிக்கவும், வெற்றியடையவும் முடியும். இப்படியாக வில்லன் வேடத்திலிருந்து ஹீரோவானவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளத்தவறினால் ஹீரோவாக நிலைப்பது கடினம்.

ஆனந்தராஜ், சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் மீண்டும் வில்லன் வேடத்துக்கே திரும்பினார். நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளனர்.

எனினும் வில்லன் நடிகர் என்பதே அவர்களுக்கு அடையாளமாகிவிட்டது. ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவை  தற்போது சில படங்களில் ஹீரோவாக புக் பண்ணி வருகின்றனர்.

ஹீரோவான பிறகும் பாபி சிம்ஹா தன் திறமையை வளர்ந்துக் கொள்ளாமலே இருக்கிறார். இத்தனைக்கும் தேசிய விருதையும் பெற்றுவிட்டார். அப்படியும் நடிப்பில் இன்னும் சீரியஸ்னஸ் வரவில்லையாம்.

காதல் காட்சிகளில் கதாநாயகி அருகில் வந்தால் கை கால் உதறல் எடுக்கிறதாம். சண்டைக்காட்சிகளில் உடம்பு வளைய மறுக்கிறதாம். நடனக்காட்சிகளில் நடனம் வரவில்லையாம்.

இதை எல்லாம் பாபி சிம்ஹாவே வெளிப்படையாக சொல்லி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற உறுமீன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இதை எல்லாம் பெருமையாகச் சொன்ன பாபி சிம்ஹா, கேமராமேன் லைட்டிங் செய்துவிட்டு ஷாட் ரெடி என அழைத்தால் தம்மடிக்கக் கூட டைம் கொடுக்க மாட்டேன்கிறார் என்று கேமராமேன் மீது குற்றம்சாட்டுகிறார்.


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions