பாபி சிம்ஹா நடிக்கும் ஓரெழுத்து படம்!

Bookmark and Share

பாபி சிம்ஹா நடிக்கும் ஓரெழுத்து படம்!

ஜிகர்தண்டா படத்தில் மதுரை ரவுடியாக நடித்தார் பாபி சிம்ஹா. அந்த படத்தில் நாயகனாக நடித்த சித்தார்த், இந்த படம் எனது சாக்லேட் பாய் இமேஜை உடைத்து என்னை ஆக்சன் ஹீரோவாக உயர்த்தும் என்று பெரிய நம்பிக்கையுடன் நடித்தார்.

ஆனால் அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் பாபி சிம்ஹாவுக்கு கிடைத்தது. அதனால் அதையடுத்து, பாம்பு சட்டை, இறைவி, மசாலா படம், உருமீன், கவலை வேண்டாம், கோ-2 உள்பட பல படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது 'க்' என்ற ஓரெழுத்து படத்தில் கமிட்டாகியுள்ளார் பாபி சிம்ஹா. இந்த 'க்' படம் மிக வித்தியாசமான கதைக்களமாம். அதுவும் அவருக்கு தேசிய விருது கிடைத்த பிறகு இந்த புதுமையான கதையில் அவர்தான் நடிக்க வேண்டும் என்று புக் பண்ணியிருக்கிறார்களாம்.

அதனால் இந்த மாதிரியான மாறுபட்ட கதைகள் தன்னை இன்னும் வித்தியாசப்படுத்திக்காட்டும் என்று புதிய உற்சாகத்துடன் நடித்து வருகிறார் பாபி. அதோடு, இதுவரையில்லாத ஒரு பெரிய அங்கீகாரமும் அவருக்கு தற்போது கிடைத்திருக்கிறது.

அதாவது, அவர் ஸ்பாட்டுக்குள் என்ட்ரி ஆனாலே, அவரை அங்கிருக்கும் முக்கிய டெக்னீசியன்கள் ஓடோடிச்சென்று வரவேற்கிறார்கள். மேலும், மேல்தட்டு ஹீரோக்களுக்கு இணையாக தடபுடலாக கவனிக்கிறார்கள். அந்த அளவுக்கு தேசிய விருது, பாபி சிம்ஹாவின் மரியாதையை உயர்த்தி விட்டுள்ளது.


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions