பாபி சிம்ஹாவின் வேகமான வளர்ச்சி...!

Bookmark and Share

பாபி சிம்ஹாவின் வேகமான வளர்ச்சி...!

'ஜிகர்தண்டா' படம் மூலம் தமிழ்நாட்டில் மூலை முடுக்குளில் உள்ள ரசிகர்களிடமும் சென்று சேர்ந்தவர் பாபி சிம்ஹா. சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான பாபி சிம்ஹா, இரண்டு வருடங்களுக்குள்ளாகவே சித்தார்த்துக்கே வில்லனாக நடித்த படம்தான் 'ஜிகர்தண்டா'.

இந்தப் படத்திற்கு முன், 'நேரம்' படத்தில் வட்டி ராஜா கதாபாத்திரத்திலும், 'சூது கவ்வும்' படத்தில் 'பகலவன்' கதாபாத்திரத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர். 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்தப் படம் அவரை பெரிய அளவில் பேச வைக்கவில்லை.

இருந்தாலும் 'ஜிகர்தண்டா' தந்த அடையாளம் பாபி சிம்ஹாவை உடனே நான்கைந்து படங்களில் நாயகனாக நடிக்க வைத்துவிட்டது. 'ஜிகர்தண்டா' வெளிவருவதற்கு முன்பே 'உறு மீன்' படத்தில் நாயகனாக ஒப்பந்தம் ஆனார்.

தற்போது 'பாம்பு சட்டை, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம்' ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக அறிமுகமான  'பீட்சா' படத்திலும் நடித்த பாபி, 'ஜிகர்தண்டா' விலும் நடித்தார்.

அடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள 'இறைவி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹா முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions