சர்ச்சையை ஏற்படுத்திய வாக்கியம்

Bookmark and Share

சர்ச்சையை ஏற்படுத்திய வாக்கியம்

பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் நடிப்பில் சக்திவேல் பெருமாள் சாமி என்பவர் இயக்கியிருக்கும் படம் உறுமீன். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

டிரைலரைப் பார்த்த தணிக்கை அதிகாரி அந்த டிரைலரில் வரும் ஒரு வாசகத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி அந்த டிரைலருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமி கொதித்துப்போய் தன் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்.

என்ன நடந்தது? சமீபத்தில் உறுமீன் படத்தின் டிரைலரை தணிக்கைக் குழுவினருக்கு காண்பித்தேன். அதில் REVENGE IS ALWAYS ULTIMATE என்ற ஒரு வாக்கியம் வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.

படத்தின் கதை சம்பந்தப்பட்டு வரும் அந்த வாக்கியத்தை எடுக்க முடியாது என்று நானும் கூறினேன். அதனால் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு வாக்கியத்துக்காக படத்தை தணிக்கைக் குழுவினர் நிராகரித்திருப்பது அநேகமாக இது தான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தணிக்கைக் குழுவின் விதிகளும் அவர்கள் முன்வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது. பல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம் பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என அனைத்தையும் அனுமதிக்கும் குழு, இதனை நிராகரித்திருப்பதற்கான காரணம் புரியவில்லை.'' என்றார் இயக்குனர் சக்திவேல் பெருமாள் சாமி!

ரிவைசிங் கமிட்டியிலும் இந்த வாசகத்தை காரணம் காட்டி உறுமீன் டிரைலரை அனுமதிக்கவில்லை என்றால் டிரைலர் வெளியிடாமலேயே படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம். அட... இது கூட நல்ல ஐடியாவே இருக்கே...!


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions