கீர்த்தி சுரேசுடன் ரொமான்சுக்கு தயாராகும் பாபி சிம்ஹா!

Bookmark and Share

கீர்த்தி சுரேசுடன் ரொமான்சுக்கு தயாராகும் பாபி சிம்ஹா!

ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹா, தற்போது சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் ஹீரோவாக நடித்து முடித்து விட்டார். அதையடுத்து உருமீன், பாம்பு சட்டை, இறைவி, மசாலா படம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படங்களில் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான கேரக்டரில் நடித்து வருகிறார். அதேசமயம் நெகட்டிவ் வேடங்களில் நடித்தால் மீண்டும் வில்லத்தனம் ஒட்டிக்கொள்ளும் என்பதால், அனைத்து படங்களிலுமே பாசிட்டிவ் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இதில், பாம்பு சட்டை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கீர்த்தி சுரேசுடன் நடித்த பாபி சிம்ஹா, இனிமேல்தான் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கப்போகிறார்.

என்னதான் அதிரடியான வில்லன் என்றாலும், நடிகையுடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்றதுமே வேர்த்து விறுவிறுத்துப் போகிறாராம் பாபி சிம்ஹா. அதனால், ரொமான்ஸ் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட வசன காட்சிகளை படமாக்கி விட்டு, பின்னர் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

தற்போது சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்துக்காக மதுரையில் முகாமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், இன்னும் சில தினங்களில் பாபிசிம்ஹாவுடன் ரொமான்ஸ் செய்வதற்காக சென்னை வருகிறார். 


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions