பாபி சிம்ஹா நடிக்கும் 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்

Bookmark and Share

பாபி சிம்ஹா  நடிக்கும் 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்

பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக  இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

“ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையை பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின்  இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை பார்த்தேன், இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு மிகவும் திருப்தி அளிக்கிறது. லஹரி மியுசிக் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் லஹரி மியுசிக் ஆடியோ உரிமைகளை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்’ மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.” எனக் கூறினார் லஹரி மியுசிக்  இயக்குனர் சந்துரு மனோகரன்.             

லஹரி மியுசிக், 90களின் இறுதியில்  இசை உரிமைகள் பெறுவதில் முதன்மை இடத்தில் இருந்த லஹரி நிறுவனம் , தென்னிந்திய திரைப் பட உலகில் நல்ல இசையுள்ள படங்களின் இசை உரிமையைப் பெற்று மீண்டும் தங்கள் பாரம்பரியத்தின் வழி வருகின்றனர். 


Post your comment





Related News
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions