பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!

Bookmark and Share

பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!

தற்போது விஜயசேதுபதியை போன்று ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. அதில் பாம்புசட்டை படத்தில்தான் சில மாதங்களாக நடித்து வந்தார் பாபி.

ஆனால் அந்த படத்திற்கு அவரை புக் பண்ணியபோதே உருமீன், மசாலாப்படம் போன்ற படங்களுக்கும் ஒப்பந்தம் செய்தனர். அதனால், இந்த பாம்புசட்டை படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு வந்தபோது அவர்கள் இவருக்காக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படப்பிடிப்புக்கு தயார் நிலையில் இருந்தனர்.

அதனால், அவர்களை ரொம்ப நாள் காக்க வைக்க விரும்பாத பாபி சிம்ஹா, பாம்புசட்டை படப்பிடிப்பு முடிய இன்னும் 15 நாட்களே பாக்கி இருந்தபோதும், அந்த படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, உருமீன் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு வருகிறார். இதற்கடுத்து, மசாலாப் படத்திலும் சில வாரங்கள் நடிக்கிறாராம். அதனால் பல மாதங்களாக காத்திருந்த அவர்களுக்கு இப்போதாவது கால்சீட் கொடுத்தாரோ என்கிற ஒரு ஆறுதலோடு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால், இன்னும் 15 நாட்கள் மட்டுமே பாபி சிம்ஹா எங்கள் படத்தில் நடித்தால் மொத்த படமே முடிந்து விடும். இவ்வளவு நாட்களும் நடித்தவர், கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டு வேறு படத்தில் தாவி விட்டாரே என்று பாம்பு சட்டை யூனிட் அவர் எப்போது கால்சீட் தருவார் என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது.

 


Post your comment





Related News
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
சாமி-2வில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions