பாபிசிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

Bookmark and Share

பாபிசிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் பாபிசிம்ஹா. பீட்சா, சூதுகவ்வும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார். ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பாபிசிம்ஹாவுக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. நேரம், உறுமீன், உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கோ-2, இறைவி, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்தது.

ரேஷ்மி மேனன் கேரளாவை சேர்ந்தவர். இருவரும் ‘உறுமீன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்ததாக கூறப்பட்டது. இனிது இனிது, தேநீர் விடுதி, பர்மா, மாயா, கிருமி ஆகிய படங்களிலும் ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். பாபி சிம்ஹாவும்-ரேஷ்மி மேனனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் நேற்று காலை திருப்பதியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சென்னையில் நடக்கிறது.


Post your comment





Related News
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions