விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக  அமைந்திருக்கிறது.

இதனால் தனது அடுத்தடுத்த கதைகளை மிகவும் கவனத்துடன் விஜய் சேதுபதி தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படமொன்றில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங்கும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'பீட்சா', 'சூது கவ்வும்', 'இறைவி', 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி-பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எனக்கு அந்த மாதிரி சீன் வேண்டாம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
கெளதம் கார்த்திக்குடன் இணைந்த விஜய் சேதுபதி!
மீண்டும் டபுள் ஹீரோ கதையில் விஜய் சேதுபதி, இந்த முறை யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும்! விஜய் சேதுபதி
அஜித் போல பிரியாணி விருந்து கொடுத்த விஜய் சேதுபதி!
நாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி
இப்போது தான் காதலிக்க ஆரம்பத்திருக்கிறேன் - விஜய் சேதுபதி ஓபன்டாக்
மீண்டும் கொம்பு மீசை கெட்டப்பில் விஜய் சேதுபதி
நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்தாரா விஜய் சேதுபதி- எதற்காக?
விஜய் சேதுபதி படத்திற்கு மீண்டும் ஒரு சோதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions