விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

Bookmark and Share

விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹரி இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் விக்ரமின் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றுகூட சொல்லலாம்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.விக்ரம் தற்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படங்களை முடித்துக் கொடுத்தபிறகு ‘சாமி-2’ வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சாமி-2’ படத்தை சிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘இருமுகன்’ படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions