வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!

Bookmark and Share

வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!

போகன் படம் வெளியான முதல் நாளே, அதன் வெற்றியை கமலா திரையரங்கில் கேக் வெட்டிக் கொண்டாடினார் ஜெயம் ரவியும், படக் குழுவினரும்.

அடுத்தடுத்து படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றியை ருசித்து வருகிறார் பிரபுதேவா. அவர் சமீபத்தில் நடித்து, தயாரித்து வெளியிட்ட 'தேவி' வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே வெற்றிதான்.

இப்போது பிரபுதேவா தயாரித்துள்ள படம் "போகன்.' 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லஷ்மண், ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார் அரவிந்த் சாமி.

போகன் படம் நேற்று வெளியானது. முதல் நாளன்றே இதன் வெற்றிவிழாக் கொண்டாட்டம் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

திரையின் முன்பு படக் குழுவுடன் இணைந்து கேக் வெட்டினார் ஜெயம் ரவி. பிறகு படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

"படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் படத்தின் வெற்றி முதல் காட்சி முடிந்த போதே தெரிந்து விடுகிறது.

அந்த வகையில் போகன் பெரும் வெற்றி பெற்றுள்ளது," என்றார் ஜெயம் ரவி.

 


Post your comment





Related News
சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி?
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
ஜெயம் ரவியின் அடுத்தக்கட்ட அதிரடி இன்று முதல்
சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி
யுட்யூபில் சாதனைப் படைத்த 'வனமகன்' படத்தின் டீசர்!
ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions