
ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆண்டனி என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார்.
இதற்கு தற்போது பதிலளித்துள்ள இயக்குனர் லக்ஷ்மன், போகன் கதை திருடப்பட்டது இல்லை எனவும் ஆண்டனிக்கு எதிராக தான் போலீஸிடம் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post your comment