பாலிவுட்டின் "அடுத்த வாரிசுகள்" ரெடி!

Bookmark and Share

பாலிவுட்டின்

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது பெரிய விஷயமில்லை. தமிழில் கார்த்திக், பிரபு தொடங்கி கவுதம் கார்த்தி, விக்ரம் பிரபு வரை வாரிசுகள் நடிப்பில் கோலோச்சி வருகின்றனர்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் வரை நடிகர், நடிகைகளின் வாரிசுகள் நடிக்க வரவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறி விட்டது. அந்த வகையில் அடுத்ததாக பாலிவுட் உலகை ஆளக் காத்திருக்கும் வாரிசுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மயிலுவாக தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மகள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒட்டுமொத்த தென்னிந்திய ஹீரோக்கள் முயற்சி செய்தும் யாருக்கும் பிடிகொடுக்காமல் மகளை பாதுகாத்துக் கொண்டார் ஸ்ரீதேவி.

தற்போது பாலிவுட்டில் தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஜானவியை தன்னுடைய படத்தில் அறிமுகம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஷாரூக்கான் - கௌரி தம்பதிகளின் மூத்த மகன் ஆர்யனை விரைவில் பாலிவுட் சினிமாக்களில் பார்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

தம்பி ஆப்ரகாமை தலைகீழாகப் பிடித்தது, அமிதாப் பேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்தது என்று அடிக்கடி சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார் ஆர்யன்.

18 வயதான ஆர்யனை ஷாரூக் விரைவில் நாயகனாக அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைப் அலிகான் - அம்ரிதா சிங் தம்பதிகளின் மகளான சாரா அலிகானும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். 22 வயதான சாரா மற்றும் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கத்தார் இருவரையும் ஒருசேர தயாரிப்பாளர் கரண் ஜோகர் அறிமுகம் செய்யவிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்யனுடன் ஜோடியாக சர்ச்சைகளில் சிக்கிய நவ்யா நவேலியும் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். தாத்தா அமிதாப் பச்சன், மாமா அபிஷேக், அத்தை ஐஸ்வர்யா போல நவ்யாவும் திரையுலகில் பிரகாசிப்பார் என்பது பாலிவுட்டினரின் எண்ணமாக உள்ளது. அந்த நம்பிக்கையை நவேலி காப்பாற்றுவாரா? பார்க்கலாம்.


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions