பாம்பே வெல்வெட்டில் ரன்பீர் கபூர், சான்சே இல்ல- கல்கி

Bookmark and Share

பாம்பே வெல்வெட்டில் ரன்பீர் கபூர், சான்சே இல்ல- கல்கி

‘அனுராக் காஷ்யப்’ உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவுக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர். இவரது இயக்கத்தில் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பீரியட் பிலிமான ‘பாம்பே வெல்வெட்’ திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்த படியே இருக்கிறது.

பாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படம் குறித்து, சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டைப் பெற்ற ‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’ திரைப்படத்தின் கதாநாயகி ‘கல்கி கொச்லின்’ பாராட்டு மழையைப் பொழிந்துள்ளார்.

படம் குறித்து கல்கி கூறுகையில்” நான் இந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஐ லவ் இட். இந்த படம் முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் மும்பையை பார்க்க வைத்தது. 1960-களில் மும்பை எப்படி இருந்தது என்பதைக் காட்டுவதற்காக மும்பை நகரத்தையே புதிதாக உருவாக்கியுள்ளனர். பாக்ஸராக வரும் ரன்பீரின் நடிப்பு நம்ப முடியாததாக இருந்தது” என்றார்.

மே 15-ம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions