ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்

Bookmark and Share

ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்

ஜெயம்ரவி, த்ரிஷா நடித்துள்ள படம் பூலோகம். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். ஒரு காலத்தில் வட சென்னையில் பெரிய சூதாட்டமாக நடத்தப்பட்ட குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்.

இதில் ஜெயம்ரவி பூலோகம் என்ற குத்துச்சண்டை வீரனாக நடித்துள்ளார். த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே படம் முடிந்த ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அதற்கு பிறகு ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட் படங்கள் ரிலீசாகிவிட்டது.

படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரனுக்கு அடுத்தடுத்து ஏற்பட் சில பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. தற்போது வருகிற ஜூலை 3ந் தேதி படத்தை வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

"படத்தில் நடிப்பது என் வேலை. அதன் புரமோசனுக்காக உழைக்கவும் செய்வேன். ஆனால் படத்தை வெளியிடுவது என் கையில் இல்லை. அதை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும்" என்கிறார் ஜெயம்ரவி.

"படம் தாமதமானதில் ஒரு படைப்பாளியாக நான் நிறைய வேதனை அடைந்தேன். அதே நேரத்தில் தயாரிப்பாளரின் சூழ்நிலையையும் நினைத்துப் பார்க்கிறேன். பூலோகம் எப்போது வெளிவந்தாலும் அது புதிதாகத்தான் இருக்கும். காரணம் அது பீரியட் பிலிம்" என்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சென்னை பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
பூலோகம் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஜெயம்ரவி!
பூலோகம் படத்தால் தடுமாறும் படங்கள்!
2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பூலோகம்!
ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ்
பூலோகத்தில் 35 நிமிட குத்துசண்டை காட்சிகள்: இயக்குனர் தயாரிப்பாளர் மோதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions