பூலோகம் படத்தால் தடுமாறும் படங்கள்!

Bookmark and Share

பூலோகம் படத்தால் தடுமாறும் படங்கள்!

ஜெயம்ரவி நடிப்பில் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பூலோகம் படம் தயாராகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் பலமுறை தள்ளிப்போய் அந்தப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் நடிப்பில் இந்தப்படம் வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாவதால் டிசம்பர் 24 அன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த இரண்டு படங்கள் தடுமாறுகின்றன.

ஏற்கெனவே டிசம்பர் 24 அன்று பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருக்கும் பசங்க2, இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள வில்அம்பு மற்றும் விமல் நாயகனாக நடித்திருக்கும் அஞ்சல ஆகிய படங்கள் வெளியாவதாக இருகின்றன.

திடீரென பூலோகம் வருவதாகச் சொல்லப்பட்டிருப்பதால் திரையரங்குகள் அந்தப்படத்துக்கு முன்னுரிமை தரத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அஞ்சல படத்தைத் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துவிட்டார்கள்.

வில்அம்பு படத்தையும் தள்ளிவைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். பசங்க2 மட்டும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. எனவே டிசம்பர் 24 அன்று பசங்க2 மற்றும் பூலோகம் ஆகிய இருபடங்கள் மட்டும் வெளியாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சென்னை பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!
இந்த ஆண்டு இறுதியில் சிக்ஸர் அடித்த ஜெயம் ரவி!
பூலோகம் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ஜெயம்ரவி!
2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பூலோகம்!
ஜெயம்ரவிக்கு ரொம்ப பெரிய மனசு! - த்ரிஷா
ஜூலை 3ல் பூலோகம் ரிலீஸ்
தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்
விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ்
பூலோகத்தில் 35 நிமிட குத்துசண்டை காட்சிகள்: இயக்குனர் தயாரிப்பாளர் மோதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions