ஒரு கோடி சம்பளம் கேட்ட நகைச்சுவை நடிகர்

Bookmark and Share

ஒரு கோடி சம்பளம் கேட்ட நகைச்சுவை நடிகர்

தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை மன்னனாக வலம் வரும் நடிகர் பிரம்மானந்தம். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாது காணப்படுவார்.

அதற்கு ஏற்றார் போல் பிரம்மானந்தம் முன்னணி நடிகர்களின் படம் என்றால் கூடுதல் சம்பளமும் எதிர்பார்ப்பார். அந்த வகையில் டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தில் நடிக்க பிரம்மானந்தத்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.

பிரம்மானந்தம் அப்படத்தில் ஒரு மாதம் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீவாஸ் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி பிரம்மானந்தத்திடம் கேட்டுள்ளார். ஆனால் சம்பளத்தைக் குறைக்காத பிரம்மானந்தத்தை படத்திலிருந்து நீக்கி விட்டதாகக் கூறப்படுகின்றது.

ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகன்  நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions