இவ்வருட இறுதியில் பிரமோற்சவம் படத்தை வெளியிட முடிவு

Bookmark and Share

இவ்வருட இறுதியில் பிரமோற்சவம் படத்தை வெளியிட முடிவு

டோலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு  ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில்  பிரம்மோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார்.

மிர்ச்சி இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. அப்படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்தில் நாயகிகளாக ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பரணிதா சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் ஸ்ரீகாந்த் இப்படத்தின் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 10 ஆம் தேதி முதல் துவங்கும் என இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை இவ்வருட இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் திரையிட படக்குழுவினர்  முடிவு செய்துள்ளனர்.  ஸ்ரீமந்துடு படத்தை முடித்த பின்னர் மகேஷ்பாபு இப்படத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions