திருப்பதியில் துவங்கும் பிரமோற்சவம் படப்பிடிப்பு

Bookmark and Share

திருப்பதியில் துவங்கும் பிரமோற்சவம் படப்பிடிப்பு

ஸ்ரீமந்துடு வசூல் சாதனை வெற்றிக்கு பிறகு டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அடுத்து பிரமோற்சவம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். 

இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16-ல் துவங்கவுள்ளது. அதன்படி பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்பு திருப்பதில் செப்டம்பர் 16-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.

குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கவுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இப்படத்தில் சேகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கின்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions