இறுதிக் கட்டத்தை எட்டிய ப்ரூஸ் லீ

Bookmark and Share

இறுதிக் கட்டத்தை எட்டிய ப்ரூஸ் லீ

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான  ராம் சரண் தற்போது ப்ரூஸ் லீ படத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார்.  

திரைப்பட நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சிகள் சொல்லித் தரும் ஸ்டன்ட் மாஸ்டராக ராம் சரண் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இப்படத்தை இயக்குகின்றார்.

தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார்.  ஹைதராபாத், யுரோப் போன்ற இடங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் 80% படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுவிட்டதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.இப்படத்தின் டீசர் வெளிவந்து வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தை அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions