ப்ரூஸ் லீ - ஜி.வி.பிரகாஷ், ராம் சரண் படங்களின் பெயர்

Bookmark and Share

ப்ரூஸ் லீ - ஜி.வி.பிரகாஷ், ராம் சரண் படங்களின் பெயர்

ப்ரூஸ் லீயைத் தெரியாதவர்கள யாரும் இருக்க மாட்டார்கள். ஹாங்காங் நடிகரான ப்ரூஸ் லீ, அவருடைய சண்டைப் படங்களுக்காகவே அதிகம் பேசப்பட்டவர்.

இளம் வயதிலேயே மரணமடைந்தவரின் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த நடிகரின் பெயரில் தமிழ், தெலுங்கில் தனித் தனியாக இரண்டு படங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க உள்ள ஒரு படத்தின் பெயர் ப்ரூஸ் லீ.

கடந்த ஜுலை மாதம் 27ம் தேதியே இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பாண்டிராஜின் உதவியாளரான பிரஷாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த சில நாட்களாகக் கூட இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படத்திற்கும் ப்ரூஸ் லீ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குனரான ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார்.  

பெயருடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் 28ம் தேதிதான் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் ராம் சரண் ஸ்டன்ட் மாஸ்டராக நடித்துள்ளார். ப்ரூஸ் லீ என்ற பெயர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் தமிழ்ப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே பெயரில் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்திற்கும் வைத்துள்ளார்கள். 


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions