முதன்முறையாக துப்பாக்கி ஏந்தி நடிக்கும் பர்கான் அக்தர்

Bookmark and Share

முதன்முறையாக துப்பாக்கி ஏந்தி நடிக்கும் பர்கான் அக்தர்

டான், டான்-2 போன்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் பர்கான் அக்தர். இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் 'பாக் மில்கா பாக்' தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து வௌிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது.

தற்போது பர்கான், விது வினோத் தயாரிப்பில்,  'வசீர்' என்ற  படத்தில் ஏடிஎஸ் போலீஸாக நடித்து வருகிறார். அதுமுட்டுமின்றி முதன்முறையாக ஆக்ஷ்ன் வேடம் ஏற்று நடித்து வருகிறார் பர்கான். படத்தில் பர்கான் ஆக்ஷ்ன் ரோல் பண்ணுவதால் முதன்முறையாக துப்பாக்கி ஏந்தி நடிக்க இருக்கிறார்.

ஆனால் இதுவரை அப்படியொரு ரோலில் பர்கான் நடிக்கவில்லை என்பதால் முறையாக ஒருவரிடம் பயிற்சி பெற்று நடித்து வருகிறார் பர்கான். இதுகுறித்து இப்படத்தை இயக்கும் பிஜய் நம்பியார் கூறுகையில், பர்கான் துப்பாக்கி ஏந்தி திரையில் தோன்றியபோது செயற்கை தன்மையின்றி ரியலாக இருந்தது.

இதுமாதிரியான ரோலுக்கு இவர் தான் மிகப் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார். வசீர் படம் டிசம்பர் மாதம் வௌியாக இருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions