சினிமாவுக்கு வருகிறார் சீரியல் வில்லி கரோலின்!

Bookmark and Share

சினிமாவுக்கு வருகிறார் சீரியல் வில்லி கரோலின்!

அழகி சீரியலில் நெகட்டீவான வேடத்தில் நடித்து சின்னத்திரை நேயர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி பிரபலமானவர் கரோலின். அதன்பிறகு சொந்தம் பந்தம் தொடரில் நடித்த அவர், இப்போது ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஆனால் இந்த நேரத்தில் பாண்டிராஜ் இயக்கியுள்ள, "ஹைகூ" என்ற படத்திலும் ஒரு டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் கரோலின்.  அதோடு, சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். டிவியில் பிசியாக நடித்து வரும்போது சினிமாவுக்கு வருவது ஏன்? என்று அவரைக்கேட்டால், நான் டிவியில் நடிப்பதற்கு முன்பே சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.

ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. பின்னர் படவாய்ப்புகள் கிடைக்காததால்தான் டிவிக்கு வந்தேன். இருப்பினும் சினிமா ஆசை என்னை விடவில்லை. அதனால்தான் சில சிறிய படங்களில் நடித்தேன். அந்த படங்கள் வெளிவராமல் கிடக்கின்றன.

இதையடுத்து இனிமேல் சிறிய வேடம் என்றாலும் பெரிய படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். அப்படி முயற்சி செய்தபோது தான் சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஹைக்கூ படத்தில் ஒரு டாக்டர் வேடத்தில் நடித்துள்ளேன்.

தொடர்ந்து டிவியில் நடிப்பது போன்று சினிமாவிலும் வெயிட்டான வேடங்களில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் கரோலின், சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் டிவியை விட சினிமாவுக்கே முதலிடம் கொடுப்பேன் என்கிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions