நயன்தாரா போல வளர வேண்டும்! - கேத்ரின் தெரசா

Bookmark and Share

நயன்தாரா போல வளர வேண்டும்! - கேத்ரின் தெரசா

மெட்ராஸ் படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அவர் நடிப்பில் வெளியான முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தபடியாக கணிதன், கதகளி, வீர தீர சூரன் ஆகிய படங்களில் கமிட்டானார்.

மேலும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஆக, இன்று ரிலீசாகியிருக்கும் கதகளி படமும் வெற்றி பெற்றால் பரபரப்பான நடிகையாகி விடுவார் கேத்ரின் தெரசா.

மேலும், தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வந்தபோதும் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு அதிகரித்துள்ளது. அதனால் இதுவரை ஐதராபாத்தில் முகாமிட்டிருந்த அவர், தற்போது சென்னைக்கு முகாமை மாற்றியிருக்கிறார்.

அது மட்டுமின்றி, தன்னைப் போன்ற கேரளத்து நடிகையான நயன்தாராவைப் போன்று தானும் ஒரு முன்னணி நடிகையாக வளர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறாராம்.

குறிப்பாக, சினிமாவில் ஹீரோக்களை சார்ந்தே இருப்பது போன்ற நிலையை மாயா படத்திற்கு பிறகு நயன்தாரா மாற்றியிருப்பதைப் போன்று தானும் கதாநாயகியை முன்னிறுத்தும் கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் கேத்ரின் தெரசா, இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் அந்த மாதிரி கதைகளில் நடிப்பதையே தனது டார்கெட்டாக வைத்திருக்கிறாராம்.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா
கடம்பன் முதல் நாள் வசூல்- இதோ
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions