கதையை கூட கேட்காமல் கமிட்டான கேத்ரின் தெரசா!

Bookmark and Share

கதையை கூட கேட்காமல் கமிட்டான கேத்ரின் தெரசா!

மெட்ராஸ் படத்தில் தமிழுக்கு வந்தவர் கேத்ரின் தெரசா. அதையடுத்து கணிதன் படத்தில் அதர்வாவுடன் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. மேலும், மெட்ராஸ் வெற்றி படம் என்றபோதும் அதில் கேத்ரின் தெரசாவின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.


மாறாக, அதேபடத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த ரித்விகாவின் நடிப்பே பேசப்பட்டது. அதனால்தான் அதையடுத்து பல படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனால் மெட்ராஸ் பெற்றுத்தராத நல்ல பெயரை கணிதன் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார் கேத்ரின்தெரசா.


இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கயிருந்த த்ரிஷா, அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

விளைவு, அந்த வாய்ப்பு இப்போது கேத்ரின் தெரசாவுக்கு கிடைத்திருக்கிறது. மேலும், த்ரிஷா நடிக்கயிருந்த வேடம் என்பதால், அதே படத்தில் இன்னொரு நாயகியாக டாப்சி இருந்தும்கூட கதையைகூட கேட்காமல் கமிட்டாகி விட்டாராம் கேத்ரின். காரணம், த்ரிஷா ரொம்ப பெரிய நடிகை. 


அவர் ஒரு வேடத்தில் நடிக்கயிருந்தார் என்றால் அது கண்டிப்பாக பெரிய வேடமாகத்தான் இருக்கும். அதனால்தான், அந்த வேடத்தில் நடிக்க கதை கேட்க வேண்டியதில்லை என்று எதையும் கேட்காமல் கமிட்டாகி விட்டேன் என்று கூறி வருகிறார் கேத்ரின் தெரசா.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions