சென்னை எனக்கு விலாசம் கொடுத்தது: கேத்ரின் தெரசா

Bookmark and Share

சென்னை எனக்கு விலாசம் கொடுத்தது: கேத்ரின் தெரசா

மெட்ராஸ் படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமான கேத்ரின் தெரசா வேகமாக வளர்ந்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்...நான் கேரளப்பெண்.

பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான் என்றாலும் சென்னைத்தான் எனக்கு விலாசம் கொடுத்திருக்கிறது. எனது தாய், தந்தை துபாயில் தான் இருக்கிறார்கள். துபாயை விட இந்தியாவில் தான் பல சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. எப்போதாவது துபாய் செல்வேன். கல்லூரியில் படிக்கும் போது கன்னடம், மலையாள படங்களில் நடித்தேன்.

தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த பின் சிறிய இடைவெளி இருந்தது.

ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறேன். இப்போது ‘கதகளி’க்கு பிறகு கணிதன், வீரதீரசூரன் என்று வரிசையாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. இனி இடைவெளியே இருக்காது.

நேரம் கிடைக்கும் போது புத்தகம் படிப்பேன், டி.வி. பார்ப்பேன் மற்றபடி பொழுது போக்குவதற்கு நேரமே இருக்காது. எப்போதாவது சமையல் செய்வேன்.
கதகளியில் என்னுடன் நடித்த விஷால் நல்ல உழைப்பாளி.

நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வருவார். நல்ல நடிகர். நான் முடிந்த வரை ஒவ்வொரு படத்திலும் வெல்வேறு விதமாக நடிக்க முயற்சி செய்வேன். ஒரே மாதிரி நடிப்பதை தவிர்ப்பேன்.

என் அம்மா துபாயில் இருக்கிறார். அப்பா எனக்கு உதவியாக வருகிறார். தற்போது ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். நடிகைகளில் முதல் இடம் இரண்டாவது இடம் என்ற கவலை இல்லை.

என் படங்கள் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். இது தான் என் லட்சியம். தமிழ் ரசிகர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன்.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா
கடம்பன் முதல் நாள் வசூல்- இதோ
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions