ரசிகர்களை கவர கேத்ரின் தெரசா புதிய திட்டம்!

Bookmark and Share

ரசிகர்களை கவர கேத்ரின் தெரசா புதிய திட்டம்!

மெட்ராஸ் படத்தில் கார்த்தியுடன் நடித்தவர் கேத்ரின் தெரசா. அந்த படத்தில் அவர் நடிப்பதற்கு பெரிதாக வேலை இல்லைதான் என்றாலும், வெற்றி பெற்ற படத்தின் நாயகி என்பதால் தற்போது அவர் கைவசம் கணிதன், வீர தீர சூரன் போன்ற படங்கள் உள்ளன. இதில் கணிதன் படத்தில் அதர்வாவுடன் நடித்துள்ள கேத்ரின், வீர தீர சூரன் படத்தில் விஷ்ணுவுடன் நடிக்கிறார்.

மேலும், முதல் படத்தில் பெரிதாக ரசிகர்களை கவர்ந்திழுக்காத கேத்ரின் தெரசா இந்த படங்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காகவே கிளுகிளுப்பான நாயகியாகவும் உருவெடுத்திருக்கிறார்.

இதற்கு முன்பு தெலுங்கு, மலையாள படங்களில் ஓரளவு கிளாமர் வேடங்களில் நடித்திருந்தபோதும் தமிழில் அதையெல்லாம் தவிர்த்து விட்டு திறமைக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து நடிக்கத்தான் ஆசைப்பட்டார் கேத்ரின்.

ஆனால் அந்த நடிப்பு ரசிகர்களிடம் அவரை கொண்டுப்போய் சேர்க்கவில்லை. அதனால்தான் இப்போது கிளாமர் கதவுகளையும் திறந்து விட்டிருக்கும் கேத்ரின் தெரசா, மனதை தொடும் உருக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் எனக்கு ஆர்வம் மிகுதி என்றும் சில இயக்குனர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்து வருகிறார்.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions