சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல்: சி.பி.ஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு

Bookmark and Share

சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல்: சி.பி.ஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை செம்பியத்தை சேர்ந்த கோ.தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும்போது நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 காட்சிகள் வரை நடத்துகிறார்கள்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதுகுறித்து ஏற்கெனவே நான் கொடுத்த புகார் மீது புலன் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

எனவே இந்த முறைகேட்டை கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நேற்று (ஜன 27) விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வருகிற 30ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions