சிசிஎல் கிரிக்கெட்: சென்னை ரைனோஸை வீழ்த்தியது தெலுங்கு வாரியர்ஸ்

Bookmark and Share

சிசிஎல் கிரிக்கெட்: சென்னை ரைனோஸை வீழ்த்தியது தெலுங்கு வாரியர்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி இந்த வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணியும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும் கொச்சி மைதானத்தில் மோதியது.

முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் அசோக் செல்வனும், விக்ராந்தும் களம் இறங்கினர். இதில் அசோக் செல்வன் 1 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய விஷ்ணு 16, சாந்தனு 24 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள்.

விக்ராந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி 64 பந்துக்களில் 100 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை ரைனோஸ் அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களை எடுத்தது. 

இதைத்தொடர்ந்து தெலுங்கு வாரியர்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே தெலுங்கு வாரியர்ஸ் அணியினர் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 168 ரன்கள் எடுத்து சென்னை ரைனோஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Post your comment





Related News
நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் நடக்கிறது
சிசிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்தியது கர்நாடகா
நடிகர்கள் கலந்து கொள்ளும் சிசிஎல் 25ஆம் தேதி தொடங்குகிறது..!
சி.சி.எல் துணைத் தூதராக நடிகை சஞ்சிதா ஷெட்டி..!
சி.சி.எல் சென்னை அணி விளம்பர தூதராக த்ரிஷா..!
விஜய், நயன்தாரா வந்து கலக்கிய- சென்னை சிசிஎல் பார்ட்டி!
சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மீண்டும் கோப்பையை தக்கவைக்குமா?
நட்சத்திர கிரிக்கெட்டில் கன்னட நடிகர்களுடன் மோதலா?- நடிகர் விஷால் பேட்டி
ந‌ட்சத்திர கிரிக்கெட்: சென்னை ரைனோஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions