சிசிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்தியது கர்நாடகா

Bookmark and Share

சிசிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்தியது கர்நாடகா

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி இந்த வருடம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும் சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோசர் அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய கர்நாடகா புல்டோசர் அணியினர், ஆரம்பத்தில் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் முதல் விக்கெட்டுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த ராகுலும், சர்மாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்தது.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை ரைனோஸ் அணியினர், ஆரம்பத்திலேயே தடுமாற ஆரம்பித்தனர். 40 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே 3 விக்கெட்டுகளை சென்னை ரைனோஸ் பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் சென்னை ரைனோஸ் அணியால் 19 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து 83 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா புல்டோசர் அணி வென்றது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக கலையரசன் 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்திருந்தார். பரத் பேட்டிங் செய்யவரவில்லை.


Post your comment





Related News
நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் நடக்கிறது
சிசிஎல் கிரிக்கெட்: சென்னை ரைனோஸை வீழ்த்தியது தெலுங்கு வாரியர்ஸ்
நடிகர்கள் கலந்து கொள்ளும் சிசிஎல் 25ஆம் தேதி தொடங்குகிறது..!
சி.சி.எல் துணைத் தூதராக நடிகை சஞ்சிதா ஷெட்டி..!
சி.சி.எல் சென்னை அணி விளம்பர தூதராக த்ரிஷா..!
விஜய், நயன்தாரா வந்து கலக்கிய- சென்னை சிசிஎல் பார்ட்டி!
சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மீண்டும் கோப்பையை தக்கவைக்குமா?
நட்சத்திர கிரிக்கெட்டில் கன்னட நடிகர்களுடன் மோதலா?- நடிகர் விஷால் பேட்டி
ந‌ட்சத்திர கிரிக்கெட்: சென்னை ரைனோஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions