நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் நடக்கிறது

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் நடக்கிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் முயற்சியில் அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். இரண்டு மாடி கட்டிடமாக இது அமையலாம் என்று தெரிகிறது. 

இதற்கான வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 17-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது, நிதி திரட்டுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

ஏற்கனவே கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தவும், புதிய படம் தயாரிக்கவும் திட்டமிட்டனர். இது குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் நடிகர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அழைக்கப்பட உள்ளனர். நிதி திரட்டுவதற்காக தயாராகும் சினிமா இரண்டு கதாநாயகர்களை கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

விஷாலும் கார்த்தியும் இதில் நடிக்கின்றனர். ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, உள்ளிட்ட பல கதாநாயகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆட வைக்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். அனைத்து கதாநாயகர்களும் சம்பளம் வாங்காமல் இதில் நடிக்கிறார்கள். 

இந்த படம் மூலம் பல கோடிகள் வசூலாகும் என்றும் அந்த மொத்த பணமும் கட்டிட நிதியில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் (மார்ச்) கூட்ட திட்டமிட்டு உள்ளனர்.


Post your comment





Related News
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் கிடைத்த மொத்த தொகை எவ்வளவு?
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மற்றொரு மாற்றம்?
நட்சத்திர கிரிக்கெட்டுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் அறிமுக கூட்டம் நாளை நடக்கிறது!
சிசிஎல் கிரிக்கெட்: சென்னை ரைனோஸை வீழ்த்தியது தெலுங்கு வாரியர்ஸ்
சிசிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை வீழ்த்தியது கர்நாடகா
நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக விஷால் அறிவிப்பு
சினிமாவில் நடிக்கவரும் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions