செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Bookmark and Share

செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ரிலீசாக இருக்கிறது.


Post your comment





Related News
ரசிகர்களின் விமர்சனத்தால் நீக்கப்படும் காட்சிகள்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
சின்னத்திரையில் ஒளிபரப்பாக‌விருக்கும் சிம்புவின் ‘வானம்’
பரத்துக்கு சிம்பு பதிலடி..!
சிம்புவின் வானம் பற்றி புலம்பும் பரத்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions