நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ உள்ள செல்போன் எங்கே?

Bookmark and Share

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ உள்ள செல்போன் எங்கே?

பிரபல மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வீடியோ காட்சி அடங்கியுள்ள செல்போனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை கடத்தியவுடன் அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில் யாருக்கோ போன் செய்து தகவல் கொடுத்தார். அந்த நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

நடிகையை மானபங்கம் செய்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த கொடூர செயலை வீடியோ எடுத்த வெள்ளை நிற செல்போனை சுனில் கொச்சியில் உள்ள ஏரி ஒன்றில் வீசிவிட்டார்.

நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை வீசிய இடத்தை சுனில் போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

கொச்சி ஏரியில் செல்போனை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த செல்போன் கிடைத்தால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதில் நடிகரும், இயக்குனருமாக உள்ள ஒரு மலையாள திரையுலக பிரபலத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அல்போன்ஸ் புத்ரனிடம் மன்னிப்பு கேட்ட சாய் பல்லவி..!
இந்தியாவில் ஐ ப்லே முதல் முறையாக வேளச்சேரியில் சிம்பு துவக்கி வைத்தார்..!
ஷூட்டிங் ஸ்பாட்டில் வாக்குவாதம் \'வீரம்\' ஷூட்டிங் ரத்து..!
நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்கள்...!
கோவிலில் மச்சான்ஸ் நடிகையின் நடன நிகழ்ச்சி ரத்தானதால்... ஏமாற்றமடைந்த கிராம மக்கள்!
விஸ்வரூபம் பிப் 7ந் தேதி ரிலீஸ்: கமலின் அதிகார பூர்வ அறிவிப்பு!
திரைப்படமாகும் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவல்!
தமிழ்நாடு தியேட்டர்களில் இனிமேல் நைட் ஷோ இல்லை
அனுமதியின்றி பாடல் பதிவு செய்தால்.? செல் மியூசிக் எச்சரிக்கை
சிந்திப்பதற்கு தடையாக இருக்கும் செல்போன்: இயக்குனர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions