தணிக்கை குழுவினர் பாராட்டிய சண்டிவீரன்

Bookmark and Share

தணிக்கை குழுவினர் பாராட்டிய சண்டிவீரன்

‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சண்டிவீரன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தை பாலாவின் பி.ஸ்டுடீயோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

இப்படம் குறித்து ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எஸ்.சரவணன் கூறும்போது, இப்படம் வருகிற ஆக 7-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 250 முதல் 350 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எல்லா மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சண்டிவீரன் கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள படம். இந்த படத்தில் காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய விறுவிறுப்பு படமாக அமைந்துள்ளது. 

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். குடும்பத்துடன் கண்டுகளிக்கக்கூடிய படமாக எடுத்ததற்கு தணிக்கை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர் என்றார். 

மேலும் அவர் கூறும்போது, ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து சிபிராஜ், சத்யராஜ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜாக்சன் துரை’ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் திகில் நிறைந்த பேய் படமாக உருவாகி வருகிறது. 

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம். ‘சண்டிவீரன்’ வெளியாகும் திரையரங்குகளில் ‘ஜாக்சன் துரை’ படத்தின் டிரைலரை வெளியிடுகிறோம் என்றும் தெரிவித்தார்.


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions