சண்டிவீரனுக்காக டப்பிங் பேசிய அதர்வா!

Bookmark and Share

சண்டிவீரனுக்காக டப்பிங் பேசிய அதர்வா!

அதர்வாவின் கேரியரில் எப்படி பாலாவின் பரதேசி ஒரு முக்கியமான படமாக இருந்ததோ, அதேபோல் இப்போது அவர் நடித்துள்ள சண்டிவீரனும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதற்கு முந்தைய இரும்புக்குதிரை அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் இந்த படத்தில் காமெடி கலந்த கதையில் நடித்திருக்கும் அதர்வா, முதன்முறையாக லுங்கி கட்டிக்கொண்டு கிராமத்து திரியும் பையனாக நடித்துள்ளார். அதோடு, தனது ஹேர்ஸ்டைல் மட்டுமின்றி, உடலையும் ஓரளவு கருப்பாக மாற்றியும் நடித்திருக்கிறாராம்.

அதனால், பக்கா கிராமத்து இளைஞனாகியிருக்கும் அவர், அந்த கதாபாத்திரத்திற்கேற்ப டப்பிங் பேசியிருக்கிறாராம். தற்போது அந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள டைரக்டர் சற்குணம், முதலில் அதர்வாவைத்தான் டப்பிங் பேச வைத்தாராம்.

இது நேட்டிவிட்டி படம் என்பதால், அதிக டயம் எடுத்து பேசிய அதர்வா, ரொம்ப இயல்பாகவும் பேசியிருக்கிறாராம். இதையடுத்து, நான் இதுவரை நடித்த கதைகளில் இது என்னை பி அண்ட் சி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் படமாக அமைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார் அதர்வா. 


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions