முழு திருப்தியில் சண்டிவீரன் அதர்வா!

Bookmark and Share

முழு திருப்தியில் சண்டிவீரன் அதர்வா!

பரதேசி படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்த அதர்வா, இப்போது சற்குணம் இயக்கியுள்ள சண்டிவீரன் படத்திலும் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். சில படங்களில் தனுஷ் நடித்தது போன்று லுங்கி, பனியன், டவல் இதுதான் அவருடைய முக்கிய காஸ்டியூம்களாம்.  

அதோடு, இதுவரை உடம்பில் மண் ஒட்டாமல் நடித்த அதர்வா, இந்த படத்தில் வாய்க்கால் வரப்புகளில் சேரில் விழுந்து எழுந்தும், புழுதிக்காட்டில் கட்டிப்புரண்டு சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

ஆக, தனக்கு பரிட்சயமில்லாத ஒரு வாழ்க்கையை இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறாராம் அவர். அதனால், இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறி வரும் அதர்வா, இந்தபடத்தில் நடித்தது எனக்கு முழு திருப்தியை கொடுத்துள்ளது.

ஒவ்வொரு காட்சியிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறேன். அதனால் இந்தபடத்தில் என்னை ரசிகர்களும் முழுசாக ஏற்றுக்கொள்வார்கள். அப்படி அவர்கள் மனதில் நான் இடம்பிடித்தால், அடுத்தபடியாக இன்னும் மாறுபட்ட கிராமத்து கதைகளை தேடிப்பிடித்து நடிப்பேன் என்கிறார் அதர்வா.

 


Post your comment





Related News
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி
பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்
சமந்தாவை காதலிக்கவில்லை – நாக சைதன்யா மறுப்பு!
‘கயல்’ சந்திரனின் இரட்டிப்பு மகிழ்ச்சி!
திருமணத்துக்கு பின் பெயரை மாற்றுகிறார் நடிகை சமந்தா
மீண்டும் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் காதலர்!
சிங்கப்பூரில் சண்டி வீரன் படத்திற்கு தடை
தணிக்கை குழுவினர் பாராட்டிய சண்டிவீரன்
பரத் ஜோடியானர் சாந்தினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions