எஃப்.சி.எஸ் கிரியேசன்ஸ் துவார் சந்திர சேகர் தயாரிப்பில் இரண்டு படங்கள்..

Bookmark and Share

எஃப்.சி.எஸ் கிரியேசன்ஸ் துவார் சந்திர சேகர் தயாரிப்பில் இரண்டு படங்கள்..

எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர்  தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு  படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.  வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தந்த எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படம் தொட்டால் தொடரும். கேபிள் ஷங்கர் இயக்கியிருந்தார். 

தனது தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன்.

திறமையானவர்களை அறிமுகப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியின்படி இப்போது  இரண்டு  புதியவர்கள் இயக்க அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.  

எட்டுத்திக்கும் மதயானை, வம்சம் ஆகிய படங்களில் நடித்து  நமக்கு நடிகராக,  அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் இயக்குனராக அறிமுகமான  டி. ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படம் செப்டெம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஊட்டி  மற்றும் கோவையில் தொடங்குகிறது. யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எல் வி கணேஷ் இசையமைக்கிறார். அதோடு மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்து துவார் சந்திர சேகர் தனது மகன் கோவின் (Govin) நடிக்க பசங்க மாதிரியான குழந்தைகளுக்கான படத்தையும் தயாரிக்கிறார்.  

தனது மகனையும் இந்த திரையுலகில் அறிமுகப்படுத்துவதில்  பெருமை கொள்வதாகக் குறிப்பிட்ட தயாரிப்பாளர் சந்திர சேகர் இப்படமும் என் வாழ்வில் பெருமை கொள்ளக்கூடிய படமாக அமையும்.

ஏனெனில் இது குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளை பேசக்கூடிய கதை எனக் குறிப்பிட்டார். மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions