படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?

Bookmark and Share

படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?

நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களாகி வசூல் குவிக்கின்றன. அந்த வரிசையில் பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கையும் படமாகிறது. இந்த படத்துக்கு ‘ஜேபி தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு’ என்று பெயரிட்டுள்ளனர். கே.ராஜேஷ்வர் டைரக்டு செய்கிறார். இவர் சீவலப்பேரி பாண்டி, அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை இயக்கியவர்.

சந்திரபாபு வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. அவருக்கு நடனம் நன்றாக வரும் என்பதால் பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. இதனால் அவரை அணுக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் பட உலகில் 1950 மற்றும் 60-களில் சந்திரபாபு முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார். கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார்.

சபாஷ் மீனா படத்தில் சிவாஜி கணேசனை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 20 கிரவுண்ட் நிலத்தில் அவருக்கு பங்களா இருந்தது. வீட்டின் இரண்டாம் தளம்வரை கார் செல்லும்.

வசதியாக வாழ்ந்த சந்திரபாபு, சொந்த படம் தயாரித்து சொத்துக்களை இழந்து கடனாளி ஆனார். கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வசித்தார். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டார். மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் குன்றி 47-வது வயதில் மரணம் அடைந்தார்.

குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, உனக்காக எல்லாம் உனக்காக, நானொரு முட்டாளுங்க, பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே, ஒண்ணுமே புரியல உலகத்திலே உள்பட பல பாடல்களை பாடி உள்ளார்.


Post your comment

Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions