பிரபுசாலமன் தயாரிப்பில் கயல் நாயகன் சந்திரன் நடிக்கும் படம்

Bookmark and Share

பிரபுசாலமன் தயாரிப்பில் கயல் நாயகன் சந்திரன் நடிக்கும் படம்

தன் நண்பர் ஜான்மேக்ஸ் என்பவருடன் இணைந்து ஷாலோன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தைத்தொடங்கிய இயக்குநர் பிரபு சாலமன், சாட்டை, மைனா உட்பட சில படங்களை தயாரித்தார்.

அதன் பிறகு ஜான்மேக்ஸ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷாலோன் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்திலிருந்து விலகி காட் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தனியாக ஆரம்பித்தார்.

கடைசியாக அவர் இயக்கிய கயல் படத்தைக் கூட எஸ்கேப் ஆர்ட்டிஸ் உடன் இணைந்து காட் பிக்சர்ஸ் சார்பில்தான் தயாரித்தார். பிரபுசாலமன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான 'கயல்' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. என்றாலும், பிரபுசாலமனுக்கு தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில்,  கயல் படத்தின் மூலம் பிரபு சாலமன் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சந்திரன் என்ற புதுமுகத்தை வைத்து,  தனது 'காட் பிக்சர்ஸ்' பட நிறுவனம் சார்பில் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை 'சாட்டை' படத்தை இயக்கிய அன்பழகன் இயக்குகிறார். பிரபு சாலமனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கவிருக்கிறது.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions