சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!

Bookmark and Share

சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!

2012ல் பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கிய படம் சாட்டை. சமுத்திரகனி, தம்பிராமைய்யா, யுவன், மகிமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம் 45 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு பல கோடிகளை வசூலித்தது.

அந்த படத்துக்குப்பிறகு இயக்குனர் சமுத்திரகனி முக்கிய நடிகராகி விட்டார். அதேபோல் பிரபுசாலமன் இயக்கிய மைனாவில் நடித்து தேசிய விருது பெற்ற தம்பி ராமைய்யாவின் கேரக்டரும் பேசப்பட்டதால் அவரும் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார்.

ஆனபோதும், அந்த படத்தை இயக்கிய அன்பழகன் தனது அடுத்த படத்தை இதுவரை இயக்காமல் இருந்தார். அதனால் ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து படமில்லையா? என்று கோடம்பாக்கத்தில் ஆளாளுக்கு கேள்வி கேட்டுக்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், தற்போது சாட்டை அன்பழகன் ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டார். அந்த படத்தில் கயல் படத்தில் பிரபுசாலமன் அறிமுகம் செய்த சந்திரன் நாயகனாக நடிக்க, ஒரு புதுமுக நாயகியும் நடிக்கிறாராம்.

இவர்களுடன் ஒரு முக்கிய வில்லனாம். ஆக 3 கேரக்டர்களை மையப்படுத்தி அப்படம் உருவாகிறதாம். ஏப்ரல் இறுதியில் மூணாறில் படப்பிடிப்பை தொடங்குகிறார் அன்பழகன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions