கண்கலங்க வைத்த சார்லி!

Bookmark and Share

கண்கலங்க வைத்த சார்லி!

வருசம் 16, புது வசந்தம், சிங்கார வேலன், நினைத்தேன் வந்தாய், வேல், ப்ரண்ட்ஸ், சிங்கம், வேங்கை, நேரம் என சுமார் 50 படங்கள் வரை நடித்தவர் சார்லி. காமெடி மட்டுமின்றி குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாய் பட எண்ணிக்கை குறைந்து விட்டது.

ஆனபோதும், வீட்டிற்குள்ளேயே ஓய்ந்து கிடக்காமல், புதிய வரவு படங்களை ஒன்றுவிடாமல் பார்த்து விடும் சார்லி, அந்த படங்களில் தன்னை கவர்ந்த விசயங்கள் இருந்தால் அவற்றை அப்படங்களின் டைரக்டர்களை தொடர்பு கொண்டு கோடிட்டு காட்டுகிறாராம்.

அதனால் பல ஆண்டுகளாக சினிமா வட்டாரத்தை விட்டு சற்று விலகியிருந்த சார்லி, இப்போது நெருக்கமாகி விட்டார். அந்த வகையில், அவர் அதிகமாக நம்பிக்கொண்டிருந்த காமெடியன்கள் அவரை கைவிட்டநிலையில், குணசித்திர வேடங்களில் நடிக்க சில டைரக்டர்கள் தற்போது அவருக்கு சான்ஸ் கொடுத்து வருகிறார்களாம், அந்தவகையில், கிருமி என்ற படத்தில் சார்லிக்கு மிக முக்கியமான ஒரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

படம் முழுக்க வரும் அந்த கேரக்டரில் சில காட்சிகளில் கண்கலங்க வைத்திருக்கிறாராம் சார்லி. அதனால் இந்த படத்திற்கு பிறகு காமெடியன் என்கிற முத்திரை என்னை விட்டு விலகி குணசித்திர நடிகர் என்கிற இமேஜ் அழுத்தமாக பதிந்து கொள்ளும் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் சார்லி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions